கேட்ச் பிடிக்க சென்று 4 பற்களை இழந்த இலங்கை வீரர் சாமிகாவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

கேட்ச் பிடிக்க சென்று 4 பற்களை இழந்த இலங்கை வீரர் சாமிகாவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை!
கேட்ச் பிடிக்க சென்று 4 பற்களை இழந்த இலங்கை வீரர் சாமிகாவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரில் கேட்ச் பிடிக்கச் சென்று, 4 பற்களை இழந்ததுடன் ரத்தம் சொட்ட சொட்ட மைதானத்தில் இருந்து வெளியேறிய இளம் வீரரான சமிகா கருணாரத்னே, தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகான புகைப்படத்தை பதிவிட்டு உருக்கமான நீண்ட பதிவொன்றையும் போட்டுள்ளார்.

2008ல் தொடங்கப்பட ஐபிஎல் தொடர் ஹிட்டடித்த பிறகு, அனைத்து நாடுகளும் தங்களது இளம் திறமைகளை கண்டுபிடிக்கும் முனைப்பில் அந்தந்த நாட்டிற்கான டி20 லீக் தொடர்களை ஆரம்பித்து நடத்திவருகிறது. அந்த வகையில், இலங்கை நாட்டிலும் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடர் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகிறது.

அப்படி லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரில் ஹம்பாந்தோட்டையில் நேற்று நடந்த 4-வது போட்டியில், கல்லி கிளேடியேட்டர்ஸ் மற்றும் கண்டி ஃபால்கன்ஸ் அணிகள் மோதின. அதில் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய கல்லி கிளேடியேட்டர்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனைத் தொடர்ந்து 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கண்டி ஃபால்கன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 15 ஓவரிலேயே வெற்றி இலக்கை அடைந்தது.

இந்நிலையில் முதல் இன்னிங்சின்போது, 4-வது ஓவரில் கண்டி அணியைச் சேர்ந்த கார்லெஸ் பிராத்வெய்ட் வீசிய பந்தை, கல்லி அணியைச் சேர்ந்த நுவனிந்து ஃபெர்ணான்டோ கவர் திசையில் பந்தை தூக்கி அடித்தார். இதனை கேட்ச் பிடிக்க 3 வீரர்கள் ஓடினர். அப்போது பின்புறமாக திரும்பி பார்த்தவாறே ஓடிய சமிகா கருணாரத்னே பந்தை பிடிக்க முற்பட்டபோது எதிர்பாராதவிதமாக அவரின் வாயில் வேகமாகப் பந்து பட்டது. இதில் அவரது 4 பற்கள் கீழே தெறித்து விழுந்து வாயிலிருந்து ரத்தம் கொட்டியது.

During a LPL game, Chamika Karunaratne loses 4 teeth while attempting this catch, he was later taken to the hospital for further treatment.#chamikakarunaratne #lpl#LPLT20 #CricketTwitter#topedgecricket pic.twitter.com/e1vwQMLlHT

— Top Edge Cricket (@topedge_cricket) December 8, 2022

கேட்சை கைவிடாமல் பிடித்த நிலையில், கிரவுண்டிற்குள் வந்த மருத்துவகுழுவினர் அவரை வெளியேறுமாறு கூறினர். தொடர்ந்து வெளியேறிய அவர், பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் சாமிகாவின் பற்கள் சிதறிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகின. இதைத்தொடர்ந்து அந்த அசாம்பிவித நிகழ்வு பேசுபொருளாகியது.

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்ட சாமிகா கருணரத்னே. அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “அந்த மோசமான கேட்சிற்கு பிறகு இப்போதுதான் என்னால் சிரிக்க முடிகிறது. அதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். 4 பற்கள் இழந்த நிலையில் எனது உதட்டில் 30 தையல்கள் போடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “என்னுடைய நலனுக்காக அனைத்து மெனக்கிடல்களையும் செய்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன். என்னுடைய அணி நிர்வாகம், மருத்துவமனையின் டாக்டர்ஸ், நர்சஸ் மற்றுமின்றி என்னை சரியான நேரத்திற்கு கொண்டுவந்து சேர்த்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கும் நன்றி. எனக்காக சர்ப்போர்ட் செய்த மக்களுக்காக தொடர்ந்து விளையாட விரும்புகிறேன், எனக்கு எதிராக மீம்ஸ் ஷேர் செய்யப்பட்டதையும் நான் பாசிட்டிவாகவே ஏற்றுக்கொள்கிறேன். அடுத்த போட்டியில் ஓய்வெடுக்க இருக்கிறேன். விரைவில் கண்டி அணிக்கு திரும்புவேன். மற்றும் எப்போதுமில்லாத அளவிற்கு முகத்தில் பெரிய சிரிப்போடு முழு பலத்துடன் மீண்டு வருவேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com