143 ரன்களுக்கு சுருண்டது இலங்கை இளம் அணி!

143 ரன்களுக்கு சுருண்டது இலங்கை இளம் அணி!

143 ரன்களுக்கு சுருண்டது இலங்கை இளம் அணி!

இலங்கை இளம் கிரிக்கெட் அணியை, இந்திய இளம் அணி, 143 ரன்களுக்கு சுருட்டியது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகளில் மோதுகின்றன. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய இளம் அணி முதல் இன்னிங்சில் 589 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய இலங்கை இளம் அணி இரண்டு இன்னிங்சிலும் 244, 324 ரன்கள் மட்டுமே எடுத்தது.இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 147 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. இந்திய வீரர் பவன் ஷா 282 ரன்கள் (332 பந்து) விளாசினார். 

(பவன் ஷா)

இந்நிலையில் இந்த அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை இளம் அணி முதலி ல் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இந்திய இளம் அணியின் துல்லியமான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் அந்த அணி, 38.4 ஓவர்களில் 143 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகப்பட்சமாக நிபுன் மலிங்கா 38 ரன்களும் தனஞ்செய பெரேரா 33 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

இந்திய இளம் அணி தரப்பில் அஜய் தேவ் கவுட் 3 விக்கெட்டை வீழ்த்தினார். ஜங்கரா, மங்வானி, பதோனி தலா 2 விக்கெட்டையும் தேசாய் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து இந்திய இளம் அணி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் பவன் ஷாவும் அனுஜ் ராவத்தும் ஆடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com