\
விலகினார் பிரதீப்: இலங்கையை மிரட்டும் ’காயம்’

விலகினார் பிரதீப்: இலங்கையை மிரட்டும் ’காயம்’

விலகினார் பிரதீப்: இலங்கையை மிரட்டும் ’காயம்’
Published on

காயம் காரணமாக, இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் விலகியுள்ளார். 

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் எடுத்து அசத்தினார்.

இந்நிலையில் 2வது டெஸ்டின் முதல் நாளில் தசைப்பிடிப்பு காரணமாக வெளியேறினார். நேற்று அவர் மைதானத்துக்குள் இறங்கவில்லை. இந்த நிலையில் காயம் குணமாக 2 மாதங்கள் வரை ஆகும் என்பதால் இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். இத்தகவலை சக வீரர் கருணாரத்னே தெரிவித்தார். 

காயம் காரணமாக கேப்டன் சண்டிமால் முதலாவது டெஸ்டில் ஆடவில்லை. ஹெராத்தும் முதலாவது டெஸ்டில் காயமடைந்தார்.முதலாவது டெஸ்டின் போது ஆல் ரவுண்டர் குணரத்னே விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு விலகினார். இப்போது பிரதீப்பும் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி இருப்பதால் இலங்கைக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com