பாகிஸ்தானுக்கா? இலங்கை வீரர்கள் மீண்டும் தயக்கம்!
பாகிஸ்தானில் சென்று விளையாட இலங்கை கிரிக்கெட் அணி மீண்டும் தயக்கத்தை தெரிவித்துள்ளது.
இலங்கை அணி, கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தானில் விளையாடிய போது பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளாகியது. இதில் 6 இலங்கை வீரர்கள் காயம் அடைந்தனர். 6 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தால் இலங்கை அணி, பாகிஸ்தான் தொடரை ரத்து செய்துவிட்டு சொந்த நாட்டுக்குத் திரும்பியது. அதன்பின் எந்த நாடும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. கடந்த 2015-ம் ஆண்டு ஜிம்பாப்வே மட்டும் டி20 தொடரில் விளையாடியது.
பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையில் இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் இப்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி பாகிஸ்தானில் நடைபெறாமல் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கடைசி டி20 போட்டி, அவர் 29 ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நடைபெற இருக்கிறது. அங்கு சென்று விளையாட, இலங்கை வீரர்கள் தங்கள் தயக்கத்தை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, வீரர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு அனுப்பியுள்ளனர். அதில் லாகூர் போட்டியை வேறு நாட்டில் நடத்த கோரிக்கை வைத்துள்ளனர்.