விளையாட்டு
கிளியின் கூடு பற்றி குரங்குக்கு என்ன தெரியும்? மலிங்கா மீது விசாரணை!
கிளியின் கூடு பற்றி குரங்குக்கு என்ன தெரியும்? மலிங்கா மீது விசாரணை!
அமைச்சரை குரங்கு என்று விமர்சித்ததாக இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்கா மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கையில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி, கடைசி லீக்கில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு இலங்கை அணி வீரர்களின் உடல் தகுதி பிரச்சினை காரணமா? என்பது பற்றி விசாரணை நடத்தப்படும் என்று இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகரா அறிவித்திருந்தார்.
இதுபற்றி கருத்து தெரிவித்த இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, ‘அவர்களின் விமர்சனம் குறித்து பொருட்படுத்தவில்லை. கிளியின் கூடு பற்றி குரங்குக்கு என்ன தெரியும்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இது சர்ச்சையாகி இருக்கிறது. அமைச்சரை மலிங்கா குரங்கு என்று விமர்சித்ததாகக் கூறி அவர் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.