இலங்கை அணியால் இந்தியாவிற்கு இருக்கும் சவால்! கடைசி போட்டியில் ஆஸி வென்றால் என்ன நடக்கும்?

இலங்கை அணியால் இந்தியாவிற்கு இருக்கும் சவால்! கடைசி போட்டியில் ஆஸி வென்றால் என்ன நடக்கும்?
இலங்கை அணியால் இந்தியாவிற்கு இருக்கும் சவால்! கடைசி போட்டியில் ஆஸி வென்றால் என்ன நடக்கும்?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டியில், 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா, இந்திய அணியை ஒரு மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்கான போட்டியானது ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய மூன்று அணிகளுக்கு இடையே கடும்போட்டியாகவே இருந்துவருகிறது. இந்தியாவை பார்டர் கவாஸ்கர் தொடரின் 3ஆவது போட்டியில் வெற்றிபெற்றதிற்கு பிறகு, அதிகாரப்பூர்வமாக முதல் இடத்தை தக்கவைத்து, உலக டெஸ்ட் சாம்பியன்சிப்பின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறது ஆஸ்திரேலிய அணி. 69 புள்ளிகளுடன் பிசிடி பட்டியலில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் முதல் 2 போட்டிகளை இந்திய அணி வென்றதற்கு பிறகு, இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பு இந்திய அணிக்கு பிரகாசமாகவே மாறியது. ஆனால் 3ஆவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் என பெரிய வித்தியாசத்தில் படுதோல்வியடைந்துள்ள இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை தனக்குத்தானே கடினமாக்கியுள்ளது. இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கான சாத்தியக்கூறுகள், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே பிரகாசமாக இருக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.

ஒருவேளை இந்தியா-ஆஸி தொடர் 2-2 என முடிவடைந்தால்?

3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை முழுவதுமாக டாமினேட் செய்து ஆஸ்திரேலியா வெற்றிபெற்றிருக்கும் சூழ்நிலையில், கடைசி டெஸ்ட் போட்டியானது நிச்சயம் இந்தியாவிற்கு மிகுந்த சவாலான ஒன்றாகவே இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஒருவேளை ஆஸ்திரேலிய அணி கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று, தொடரை 2-2 என முடிக்கும் பட்சத்தில், புள்ளிப்பட்டியலில் உள்ள 3ஆவது இடத்தில் உள்ள இலங்கை அணிக்கே இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு அதிகமாக மாறிவிடும். நியூசிலாந்து அணியை அதன் சொந்த நாட்டில் எதிர்கொண்டு விளையாடவிருக்கும் இலங்கை அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை வென்றாலே, இந்திய அணியை 3ஆவது இடத்திற்கு தள்ளும் வாய்ப்பை பெற்றுவிடும்.

தொடர் 2-1 என முடிவடைந்தால்?

ஒருவேளை ஆஸி- இந்தியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியானது இரண்டு அணிக்கும் முடிவில்லாமல் டிரா-ஆகும் பட்சத்தில், இந்தியாவின் PCT 59ஆக குறையும். அப்போது இலங்கை அணியானது நியூசிலாந்து அணியை 2-0 என ஒயிட்வாஷ் செய்யாமல் இருக்க வேண்டும். ஆனால் இலங்கை அணி 2-0 என வென்றுவிட்டால், 61.11 புள்ளிகளுடன் இறுதிபோட்டிக்குள் காலடி எடுத்து வைக்கும். எவ்வாறாயினும், நியூசிலாந்தை 2-0 என்ற கோல் கணக்கில் இலங்கை தோற்கடிக்கவில்லை என்றால், இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

தொடர் 3-1 என முடிவடைந்தால்?

இந்திய அணிக்கு இன்னும் ஒரேயொரு வெற்றி மட்டுமே போதும்... உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறலாம்! அப்படி வெற்றிபெற்றால், இலங்கையின் வெற்றி தோல்வி நிலையை இந்தியா சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அந்தவகையில் அகமதாபாத்தில் நடைபெறவிருக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தும் பட்சத்தில், இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் எந்த இடையூறும் இல்லாமல் காலடி எடுத்துவைக்கும். ஆனால் 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஒரு அபாரமான வெற்றியை பதிவு செய்துள்ள ஆஸ்திரேலியா, இந்திய அணிக்கு ஒரு பெரிய அச்சுறுத்துலை கொடுக்கும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com