\
இலங்கை அபாரம், இந்திய அணி பரிதாபம்: 11 ரன்னுக்கு 3 விக்கெட்!

இலங்கை அபாரம், இந்திய அணி பரிதாபம்: 11 ரன்னுக்கு 3 விக்கெட்!

இலங்கை அபாரம், இந்திய அணி பரிதாபம்: 11 ரன்னுக்கு 3 விக்கெட்!
Published on: 

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி, 11 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 

 இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணியிடம் இழந்த இலங்கை, அடுத்து 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒரு நாள் போட்டி தர்மசாலாவில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசாரா பெரேரா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தவானும் ரோகித்தும் களமிறங்கினர். இலங்கையின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், ரோகித் 2 ரன்னிலும் தவான் ரன் எதுவும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர். இவர்களது விக்கெட்டை லக்மலும்ம் மேத்யூசும் சாய்த்தனர். அடுத்து ஸ்ரேயாஸ் ஐயரும் தினேஷ் கார்த்திக்கும் களமிறங்கினர். தடுமாறிய தினேஷ் கார்த்திக் விக்கெட்டை, லக்மல் எடுத்தார்.

ஸ்ரேயாஸ் ஐயரும் மணீஷ் பாண்டேவும் ஆடிவருகின்றனர். இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 11 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com