விளையாட்டு
கிரிக்கெட்டில் அரசியல்? ரசிகர்கள் கோபம், சங்ககாரா சமாதானம்
கிரிக்கெட்டில் அரசியல்? ரசிகர்கள் கோபம், சங்ககாரா சமாதானம்
இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி, முதலாவது ஒரு நாள் போட்டியையும் வென்றது. போட்டிக்குப் பிறகு, இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் சிலர், அந்நாட்டு வீரர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
‘கிரிக்கெட்டில் அரசியல் வேண்டாம்’ என்று கத்தினர். அவர்கள் சென்ற பேரூந்தை தடுக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா, ‘நாங்கள் வெற்றிபெற்றால் எங்களோடு சேர்ந்து கொண்டாடுகிறீர்கள். தோற்றால் எதிர்க்கிறீர்கள். உங்கள் அன்பும் ஆதரவும்தான் நம் கிரிக்கெட் அணிக்கு எப்போதும் முக்கியம். இலங்கை அணி பிரச்னையில் இருக்கும்போது உங்கள் ஆதரவுதான் பலமாக இருக்கும். அதுதான் அணிக்கு இப்போதைய தேவை’ என்று கூறியுள்ளார்.