இலங்கை, ஆஸ்திரேலிய தொடர்கள் : இந்திய அணிக்கு திரும்பிய பும்ரா, ஷிகர் தவான்..!

இலங்கை, ஆஸ்திரேலிய தொடர்கள் : இந்திய அணிக்கு திரும்பிய பும்ரா, ஷிகர் தவான்..!

இலங்கை, ஆஸ்திரேலிய தொடர்கள் : இந்திய அணிக்கு திரும்பிய பும்ரா, ஷிகர் தவான்..!
Published on

இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர் இரண்டையும் சொந்த மண்ணில் இந்தியா வென்றது. இதைத்தொடர்ந்து இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அடுத்தடுத்து இந்தியாவிற்கு வருகை தரவுள்ளன. ஜனவரி 5ஆம் தேதி தொடங்கி மூன்று டி20 போட்டிகளில் இலங்கை இந்தியாவுடன் மோதுகிறது. இதைத்தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகள் தொடர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே ஜனவரி 14ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத் தொடர்களுக்குமான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி :

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ரிஷாப் பண்ட், சிவம் டூபே, யஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தகூர், நவ்தீப் சைனி, ஜஸ்ப்ரித் பும்ரா, வாஷிங்டன் சுந்தர்.

ஆஸ்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி :

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், ரிஷாப் பண்ட், சிவம் டூபே, ரவீந்திர ஜடேஜா, யஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தகூர், முகமத் ஷமி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com