\
டி20 உலகக் கோப்பை : இலங்கைக்கு எதிராக நெதர்லாந்து 44 ரன்களுக்கு ஆல் அவுட்!

டி20 உலகக் கோப்பை : இலங்கைக்கு எதிராக நெதர்லாந்து 44 ரன்களுக்கு ஆல் அவுட்!

டி20 உலகக் கோப்பை : இலங்கைக்கு எதிராக நெதர்லாந்து 44 ரன்களுக்கு ஆல் அவுட்!
Published on: 

2021 டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்று போட்டியில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸை இழந்து முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 44 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி உள்ளது. 

மொத்தம் 10 ஓவர்கள் விளையாடியது அந்த அணி. நெதர்லாந்து அணியில் பேட்ஸ்மேன் கொலின் அக்கர்மேனை தவிர மற்ற அனைவரும் ஒற்ற இலக்க ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். இலங்கை அணிக்காக வனிந்து ஹசரங்கா, லஹிரு குமாரா என இரண்டு பவுலர்களும் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். 45 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 7.1 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழந்து 77 பந்துகள் மீதமிருக்கையில் 45 ரன்கள் எடுத்து வெற்றி வாகை சூடியது.

முதல் சுற்றில் இருந்து குரூப் ஏ-வில் இலங்கை மற்றும் நமீபியா முன்னேறி உள்ளன. மறுபக்கம் குரூப் பி-யில் ஸ்காட்லாந்து மற்றும் வங்கதேச அணிகள் முன்னேறி உள்ளன. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com