தோனி விக்கெட்டை வீழ்த்திய ‘யார்க்கர்’ நடராஜன் - அஸ்வினிடம் சொன்னதும்.. நடந்ததும்!!

தோனி விக்கெட்டை வீழ்த்திய ‘யார்க்கர்’ நடராஜன் - அஸ்வினிடம் சொன்னதும்.. நடந்ததும்!!
தோனி விக்கெட்டை வீழ்த்திய ‘யார்க்கர்’ நடராஜன் - அஸ்வினிடம் சொன்னதும்.. நடந்ததும்!!

துபாயில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி தோல்வியை தழுவியிருந்தாலும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த நடராஜன் தனது கனவை நிஜமாக்கியுள்ளார். 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தின் சீனியர் வீரரும், நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அஷ்வின் உடனான யூடியூப் சேனல் பேட்டியில் ‘உன்னோட கனவு விக்கெட் யார்?’ என அஷ்வின் கேட்க வெள்ளித்தியாக சிரித்தபடி ‘தோனி’ என சொல்லியிருந்தார் நடராஜன். அவரது விக்கெட்டை வீழ்த்துவது தனது வாழ்நாள் சாதனை எனவும் சொல்லியிருந்தார்.

அதே போலவே நேற்றைய ஆட்டத்தில் 19வது ஓவரின் கடைசி பந்தில் தோனியின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியிருப்பார் நடராஜன். அதற்கு முந்தைய பந்தில் லாங் ஆன் திசையில் ஹெலிகாப்டர் ஷாட் ஆடி சிக்ஸரை பறக்கவிட்டிருப்பார் தோனி.

அதை பார்த்து சுதாரித்த நடராஜன் லோ ஃபுள் டாஸ் வீசி தோனியின் விக்கெட்டை வீழ்த்தியிருப்பர்.

‘வெல் டன் நடராஜன்.. உனது வாழ்வின் ஆகச்சிறந்த தருணம்’ என ட்விட்டரில் வாழ்த்தி உள்ளார் அஷ்வின்.

இந்த ஆட்டத்தில் மொத்தமாக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் நடராஜன். 

 போட்டி முடிந்த பிறகு தோனியும் - நடராஜனும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டனர். அதில் இருவரும் கிரிக்கெட் குறித்தே அதிகம் பேசியிருக்க வாய்ப்புள்ளது. நடராஜன் தனது கனவை நிஜமாக்கிய சந்தோஷத்துடன் பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com