KKR vs SRH : டாஸ் வென்ற ஹைதராபாத் பேட்டிங் தேர்வு! ஆடும் லெவன் விவரம்!

KKR vs SRH : டாஸ் வென்ற ஹைதராபாத் பேட்டிங் தேர்வு! ஆடும் லெவன் விவரம்!
KKR vs SRH : டாஸ் வென்ற ஹைதராபாத் பேட்டிங் தேர்வு! ஆடும் லெவன் விவரம்!

நடப்பு ஐபிஎல் சீசனின் 49-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. துபாயில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பேட்டிங் தேர்வு செய்துள்ளார். 

இதுவரை இரு அணிகளும் 20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி விளையாடி உள்ளன. இதில் கொல்கத்தா 13 போட்டிகளிலும், ஹைதராபாத் 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. நடப்பு சீசனின் முதல் பாதியில் கொல்கத்தா, ஹைதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. புள்ளிப் பட்டியலில் கொல்கத்தா நான்காவது இடத்திலும், ஹைதராபாத் கடைசி இடத்திலும் உள்ளன. இந்த போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றால் தான் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள முடியும். 

ஆடும் லெவன் விவரம்... 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

ஷுப்மான் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, இயோன் மோர்கன் (கேப்டன்), ஷாகிப் அல் ஹசன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், சிவம் மாவி, டிம் சவுதி, வருண் சக்கரவர்த்தி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

ஜேசன் ராய், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன் (கேப்டன்), பிரியம் கார்க், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், சித்தார்த் கவுல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com