நான்கு ஓவர்கள்.. 7 ரன்கள்.. 3 விக்கெட் : சுழலில் ராஜாங்கம் நடத்திய ரஷீத் கான்

நான்கு ஓவர்கள்.. 7 ரன்கள்.. 3 விக்கெட் : சுழலில் ராஜாங்கம் நடத்திய ரஷீத் கான்

நான்கு ஓவர்கள்.. 7 ரன்கள்.. 3 விக்கெட் : சுழலில் ராஜாங்கம் நடத்திய ரஷீத் கான்
Published on

துபாயில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. 

இதனையடுத்து ஹைதராபாத் அணி பேட் செய்து இருபது ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களை குவித்தது. சாஹா, வார்னர் மற்றும் மணீஷ் பாண்டே ஹைதராபாத் அணிக்காக அற்புதமாக பேட் செய்தனர். 

இமாலய இலக்கான 220 ரன்களை டெல்லி அணி விரட்ட தடுமாறி வருகிறது. ஹைதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் நான்கு ஓவர்கள் வீசி 7 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 

ரஹானே, ஹெட்மயர் மற்றும் அக்சர் பட்டேலை ரஷீத் கான் வீழ்த்தியிருந்தார். 

அவரது பவுலிங் எக்கானமி 1.75 ரன்களை மட்டுமே. இந்த சீசனில் ஒரு இன்னிங்சில் சிறந்த பவுலிங் எக்கானமியாக இது பார்க்கப்படுகிறது. 

டெல்லி  உடனான இந்த சீசனின் முதல் லீக் ஆட்டத்தில் நான்கு ஓவர்கள் வீசி 13 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை ரஷீத் வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com