விளையாட்டு
சாஹா - வார்னர் ருத்ரதாண்டவம் : 219 ரன்கள் குவித்த ஹைதராபாத்!
சாஹா - வார்னர் ருத்ரதாண்டவம் : 219 ரன்கள் குவித்த ஹைதராபாத்!
துபாயில் நடைபெற்று வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
இதனையடுத்து ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. வார்னர் - சாஹா இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர். இருவரும் 107 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். சாஹா 45 பந்துகளில் 87 ரன்களை குவித்தார். வார்னர் 34 பந்துகளில் 66 ரன்களை சேர்த்தார்.
தொடர்ந்து களம் இறங்கிய மணீஷ் பாண்டே 31 பந்துகளில் 44 ரன்களை சேர்த்தார். இருபது ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களை எடுத்தது ஹைதராபாத்.
லீடிங் விக்கெட் டேக்கரான ரபாடா இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.
டெல்லி அணி 220 ரன்களை சேஸ் செய்து வருகிறது.