\
ஐதராபாத் அணியை தாங்கிப் பிடித்த பிரியம் கார்க்.. சென்னைக்கு 165 ரன்கள் இலக்கு..!

ஐதராபாத் அணியை தாங்கிப் பிடித்த பிரியம் கார்க்.. சென்னைக்கு 165 ரன்கள் இலக்கு..!

ஐதராபாத் அணியை தாங்கிப் பிடித்த பிரியம் கார்க்.. சென்னைக்கு 165 ரன்கள் இலக்கு..!
Published on

துபாயில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 164 ரன்களை எடுத்துள்ளது. 

ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து சீரிய இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். 

வார்னர் (28 ரன்கள்), மணீஷ் பாண்டே (29 ரன்கள்),  பிரியம் கார்க் (51 ரன்கள்),  அபிஷேக் ஷர்மா (31 ரன்கள்) எடுத்திருந்தனர். பிரியம் கார்க் ஓரளவு நிலைத்து நின்று அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

இதனையடுத்து தோனி தலைமையிலான சென்னை அணி 165 ரன்களை சேஸ் செய்ய களம் காண உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com