SRH vs RR: வானவேடிக்கை காட்டிய பேட்ஸ்மேன்கள்- 210 ரன்கள் குவித்தது ராஜஸ்தான்

SRH vs RR: வானவேடிக்கை காட்டிய பேட்ஸ்மேன்கள்- 210 ரன்கள் குவித்தது ராஜஸ்தான்
SRH vs RR:  வானவேடிக்கை காட்டிய பேட்ஸ்மேன்கள்- 210 ரன்கள் குவித்தது ராஜஸ்தான்

நடப்பு ஐபிஎல் சீசனின் ஐந்தாவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீசியது. ராஜஸ்தான் அணிக்காக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். 

இருவரும் முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஜெய்ஸ்வால் 20 ரன்கள் எடுத்து அவுட்டானார். பட்லர் 35 ரன்கள் சேர்த்தார். அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 55 ரன்கள் எடுத்தார். தேவ்தத் படிக்கல் 41 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் ராஜஸ்தான் ஸ்கோர் செய்தது. 

இருபது ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. ஹெட்மயர் 13 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் அணி 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com