”அப்போ.. நான் புடிச்ச கேட்ச்?”.. ரஷித் கான் அவுட்டும்.. தீபக் சாஹரின் ஷாக்கும்!!

”அப்போ.. நான் புடிச்ச கேட்ச்?”.. ரஷித் கான் அவுட்டும்.. தீபக் சாஹரின் ஷாக்கும்!!
”அப்போ.. நான் புடிச்ச கேட்ச்?”.. ரஷித் கான் அவுட்டும்.. தீபக் சாஹரின் ஷாக்கும்!!

துபாயில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபத் அணியும் நேற்று மோதி விளையாடின. 

வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற அழுத்தத்தோடு சென்னை விளையாடியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த சென்னை ஆறு விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களை குவித்தது. அதனையடுத்து விளையாடிய ஹைதராபாத் அணி விக்கெட்டை சீரிய இடைவெளியில் இழந்து வந்தது. 

அதிகபட்சமாக வில்லியம்சன் 39 பந்துகளில் 57 ரன்களை குவித்தார்.

17 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வில்லியம்சன் அவுட்டாக ஹைதராபாத்துக்கு தேவையான ரன்களை குவிக்கும் டாஸ்கை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டார் ரஷீத். கரன் ஷர்மாவின் ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து ஆட்டத்தை ஹைதரபாத் பக்கமாக ரஷீத் திருப்பினார். 

அதன் மூலம் 12 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையிலிருந்து ஹைதராபாத். 19வது ஓவரை ஷர்துல் தாக்கூர் வீசியிருந்தார். ரஷீத் கான் ஸ்ட்ரைக்கில் இருந்தார். முதல் பந்தை ஃபுள் டாஸாக அவுட்சைட் ஆப் திசையில் வீசினார் தாக்கூர்.

தொடர்ந்து இரண்டாவது பந்தை WIDE யாக்கராக வீச முயன்று அதில் தோல்வி கண்டார். அந்த பந்து WIDE என அறிவிக்கப்பட்டது. மீண்டும் அதே போல தாக்கூர் பந்து வீசினார்.

இதுவும் கிட்டத்த WIDE லைனுக்கு வெளியே சென்றது போல இருந்தது. அதே நேரத்தில் அது ரஷீத் கானின் பேட்டுக்கு கீழே சென்றது போலவும் இருந்தது. அதற்கு WIDE என சிக்னல் கொடுப்பதற்காக கையை மேல் நோக்கி அசைத்தார் அம்பயர் பால் ரீஃபெல். அதற்குள் கூல் கேப்டனான தோனி சினம் கொண்ட சிங்கமாக அம்பயரை பார்த்து ஆக்ரோஷமாக அப்பீல் செய்தார். அந்த பார்வை அது WIDE இல்லை என்ற தொனியில் இருந்தது. 

அதனால் அம்பயரும் சில நொடிகள் தனது முடிவு யோசித்து அது WIDE இல்லை என தனது முடிவை மாற்றிக் கொண்டார். அதனை டக் அவுட்டில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்த வார்னர் அம்பயரின் முடிவினால் அப்செட்டானார். இந்த குழப்பங்களுக்கு இடையில் அந்த ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்ற ரஷீத் லோ ஃபுள் டாஸாக வந்த அந்த பந்தை கிரீஸுக்கு பின்னால் சென்று அடித்தார்.

அது லாங் ஆன் திசையில் நின்று கொண்டிருந்த தீபக் சஹாரின் கைகளில் கேட்ச்சானது. ஆனால் அதற்குள்ளேய ஹிட் விக்கெட் முறையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார் ரஷீத். பந்தை பின்னால் சென்று அடிக்க முயன்ற ரஷீதின் கால்கள் ஸ்டெம்பில் பட்டதால் அவர் அவுட்டானார். பந்தை லாவகமாக பிடித்த தீபக் சாஹர், ‘அப்போ.. நான் பிடிச்ச கேட்ச் ஆல் அவுட் ஆகவில்லையா’ என்ற தொனியில் ஆச்சர்யத்துடன் பார்த்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com