“என்ன வார்னர், ரஷீத் கானுக்கே இடமில்லையா..?” - ஷாக் ஆகும் ஹைதராபாத் அணி ரசிகர்கள்!

“என்ன வார்னர், ரஷீத் கானுக்கே இடமில்லையா..?” - ஷாக் ஆகும் ஹைதராபாத் அணி ரசிகர்கள்!

“என்ன வார்னர், ரஷீத் கானுக்கே இடமில்லையா..?” - ஷாக் ஆகும் ஹைதராபாத் அணி ரசிகர்கள்!
Published on

ஐபிஎல் கிரிக்கெட் அணிகள் தங்கள் அணியில் உள்ள வீரர்களில் யார்? யாரை? தக்கவைக்கிறது என்பதை அறிவிப்பதற்கான கெடு நிறைவடைந்துள்ளது. இன்னும் சில நிமிடங்களில் அதிகாரபூர்வமாக அந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐபிஎல் நிர்வாகக்குழு அறிவிக்க உள்ளது. 

இந்த நிலையில் கடந்த 2012-இல் உதயமான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரீடென்ஷனில் தங்கள் அணியின் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் என தெரிகிறது. அதாவது அந்த அணியின் பிரதான வீரர்களாக அறியப்படும் முன்னாள் கேப்டன் வார்னர், ஜானி பேர்ஸ்டோ மற்றும் ரஷீத் கான் என மூன்று வெளிநாட்டு வீரர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அது தான் அந்த அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதே நேரத்தில் கேன் வில்லியம்சன் அணியில் தக்க வைக்கப்பட்டுவார் என தெரிகிறது. ஒரு முறை சாம்பியன், ஒரு முறை இரண்டாம் இடம், நான்கு முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய அணி ஹைதராபாத். அதற்கு பிரதான காரணமாக அமைந்தவர் வார்னர். அவர் நிச்சயம் விடுவிக்கப்படுவார் என தெரிகிறது. அது குறித்து அவர் கூட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவு செய்துள்ளார். 

“நீங்கள் கொடுத்த மறக்க முடியாத நினைவுகளுக்கு நன்றி. நமது அணி 100 சதவிகித ஆற்றலை வெளிப்படுத்த தேவையான சக்தியை கொடுப்பதே ரசிகர்களாகிய நீங்கள் தான். உங்களது ஆதரவுக்கு நன்றி சொல்வது மட்டும் போதாது. இது ஒரு சிறந்த அனுபவ பயணமாக இருந்தது. நானும், எனது குடும்பமும் நிச்சயம் உங்களை மிஸ் செய்வோம்” என வார்னர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். 

அதே போல ஜானி பேர்ஸ்டோவும் அணியை விட்டு விலகுவது தொடர்பான கமெண்ட் ஒன்றை பதிவு செய்துள்ளார். ஹைதராபாத் அணியின் இன்ஸ்டா பக்கத்தில் ‘இத்தனை ஆண்டுகளாக தங்களது பங்களிப்பை கொடுத்த வீரர்களுக்கு நன்றி’ என சொல்லி ஒரு போஸ்ட் பகிரப்பட்டது. 

அதற்கு பேர்ஸ்டோ “உங்கள் ஆதரவுக்கு நன்றி. வரும் நாட்களில் நமது பாதை நிச்சயம் கடக்கும் என எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com