\
இன்று பிறந்த பெண் குழந்தை.. டிவில்லியர்ஸ் விக்கெட்...  மகிழ்ச்சியில் நடராஜன்..!

இன்று பிறந்த பெண் குழந்தை.. டிவில்லியர்ஸ் விக்கெட்... மகிழ்ச்சியில் நடராஜன்..!

இன்று பிறந்த பெண் குழந்தை.. டிவில்லியர்ஸ் விக்கெட்... மகிழ்ச்சியில் நடராஜன்..!
Published on: 

நடப்பு ஐபிஎல் சீசனின் எலிமினேட்டரில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் விளையாடி வருகின்றன.

டாஸை இழந்து முதலில் பேட்ஸ் செய்த பெங்களூர் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை எடுத்தது. 

360 டிகிரி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் மட்டுமே நிலைத்து நின்று விளையாடினார். 43 பந்துகளில் 56 ரன்களை எடுத்திருந்த ஏபிடியை தமிழகத்தை சேர்ந்த நடராஜனின் அற்புதமான யார்க்கரை வீசி க்ளீன் போல்ட் செய்தார். 

நடராஜனுக்கு இன்று மகள் பிறந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மகளுக்கு பரிசாக வெற்றியை கொடுப்பாரா நடராஜன் என இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த பூரிப்பில் டிவில்லியர்ஸின் விக்கெட்டை போட்டுத்தாக்கினார் அவர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com