\
ஐபிஎல் மெகா ஏலம்: நடராஜனை தட்டி தூக்கிய சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி!   

ஐபிஎல் மெகா ஏலம்: நடராஜனை தட்டி தூக்கிய சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி!  

ஐபிஎல் மெகா ஏலம்: நடராஜனை தட்டி தூக்கிய சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி!  
Published on

நடப்பு ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் பெங்களூர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் தங்கராசு நடராஜனை ஏலத்தில் தக்கவைத்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. 4 கோடி ரூபாய்க்கு நடராஜன் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். 

ஐபிஎல் கிரிக்கெட் மூலம் சர்வதேச கிரிக்கெட் களத்தில் என்ட்ரி கொடுத்தவர் நடராஜன். 24 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய நடராஜன் 20 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இவரது யார்க்கர்கள் பேட்ஸ்மேன்களை திணற செய்யும் திறன் படைத்தவர் நடராஜன். 

இதுவரை பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிக்காக அவர் ஐபிஎல் களத்தில் விளையாடியுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com