\
ஒலிம்பிக் தடகளம்: மகளிர் 100 மீட்டர் பிரிவில் டூட்டி சந்த் தோல்வி

ஒலிம்பிக் தடகளம்: மகளிர் 100 மீட்டர் பிரிவில் டூட்டி சந்த் தோல்வி

ஒலிம்பிக் தடகளம்: மகளிர் 100 மீட்டர் பிரிவில் டூட்டி சந்த் தோல்வி
Published on

டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டியில் மகளிர் 100 மீட்டர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் டூட்டி சந்த் தோல்வியை தழுவினார்.

டோக்கியோ ஒலிம்பிக் கடந்த 23 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்புக்குரிய போட்டிகளில் ஒன்றான தடகளம் இன்று தொடங்கி இருக்கிறது. தடகளத்தில் பல்வேறு பிரிவு ஓட்டப்பந்தயம், நடைபந்தயம், மாரத்தான், வட்டு எறிதல், குண்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், டிரிப் ஜம்ப், கம்பூன்றி தாண்டுதல், டெகத்லான், ஹெப்டத்லான் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு மொத்தம் 48 தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.

இதில் மகளிர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் டூட்டி சந்த் கலந்துக்கொண்டு 7 ஆம் இடத்தை மட்டுமே பிடித்தார். இதனால் 100 மீட்டர் பிரிவில் இந்தியா தோல்வியடைந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com