''என்னுடைய தன்பால் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்'' - துத்தி சந்த்

''என்னுடைய தன்பால் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்'' - துத்தி சந்த்
''என்னுடைய தன்பால் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்'' - துத்தி சந்த்

தான் ஒரு பெண்ணை காதலிப்பதால் தன்னை வீட்டை விட்டு வெளியேற்ற குடும்பத்தினர் முயற்சி செய்வதாக ஓட்டப்பந்தய வீராங்கனை துத்தி சந்த் தெரிவித்துள்ளார்

இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனையான துத்தி சந்த், தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாக சமீபத்தில் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், நான் எனக்கான துணையை தேடிக்கொண்டேன். எனது ஊரிலேயே சில வருடங்களக்கு முன் அறிமுகமான ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன். எதிர்காலத்தில் நான் அந்தப்பெண்ணுடன் வாழ விரும்புகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்த தகவலை வெளியிட்ட பிறகு துத்தி சந்துக்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து பேசியுள்ள துத்தி சந்த், என்னுடைய தன்பாலின விருப்பத்துக்கு எனது பெற்றோரே எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் என்னுடைய சகோதரி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். என்னை வீட்டை விட்டே வெளியேற்றுவேன் என்றும் சிறையில் தள்ளுவென் என்றும் மிரட்டுகிறார். எனது சகோதரி என் குடும்பத்தில் வல்லமை படைத்தவள். எனது சகோதரனின் மனைவியை பிடிக்கவில்லை என்பதற்காக அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றினாள். அதேபோல் என்னையும் விரட்டுவேன் என்று மிரட்டுகிறாள். 

என் துணையை தேர்ந்தெடுக்க எனக்கு உரிமை உண்டு. தற்போது என் கவனம் முழுவதும் வேர்ல்ட் சாம்பியன்ஸ் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் தான் உள்ளது. நான் கடுமையாக பயிற்சி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தன்பாலினத்தில் துணையை தேர்வு செய்துள்ள முதல் விளையாட்டு வீரர் துத்தி சந்த் ஆவார். 2014ம் ஆண்டு நடத்தப்பட்ட பாலின பரிசோதனை மூலம் துத்தி சந்துக்குக்கு ஆண்மைத்தன்மை இருப்பதாகக் கூறி தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய துத்தி, சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச விளையாட்டு மன்றத்தை அணுகி நியாயம் கோரினார். இதனை அடுத்து 2015 ஆம் ஆண்டு துத்தி மீதான தடை நீக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com