நதியில் அணிவகுப்பு! 33வது பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இவ்வளவு அசத்தலான சிறப்புகள் இருக்கா!

33 வது பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் சிறப்புகள் என்ன என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
ஒலிம்பிக் போட்டி
ஒலிம்பிக் போட்டிமுகநூல்

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கொண்டாடப்படும் ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு இன்னும் 100 நாட்களே உள்ளது.

33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ந்தேதி முதல் ஆகஸ்டு 11-ந்தேதி வரை நடக்கிறது. இந்நிலையில், இதற்கான ஒலிம்பிக் தீபமானது, ஒலிம்பிக் பிறந்த இடமான கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா என்ற இடத்தில் நேற்று (16.4.2024) பாரம்பரிய முறைப்படி ஏற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சர்வதேச ஒலிம்பில் கமிட்டி தலைவர் தாமஸ் பாக், பாரீஸ் ஒலிம்பிக் ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிலையில் 33 வது ஒலிம்பிக் போட்டிக்கான சிறப்பம்சங்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதல் முறையாக.....

1) ஊதா நிறத்தில்....

பாரிஸ் நடைப்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டியின் தடகள விளையாட்டுக்கான தடங்கள் வழக்கமாக செந்நிறத்தில் இருக்கும்.

ஆனால், இந்த 33 ஆவது ஒலிம்பிக் போட்டியில் இதுவரையில் இல்லாத ஒரு திருப்பமாக முதன்முறையாக, தடகள போட்டியின் தடங்கள் பர்ப்பிள் நிறத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிற தடங்கள், பிரான்ஸின் தேசிய மைதானாத்தில் பதிக்கப்பட்டு வருவதற்கான பணிகள் நடைப்பெற்று வருகிறது.

2) அணிவகுப்பு எங்கே?

தொடக்க நிகழ்ச்சிக்கான அணிவகுப்பு, வரலாற்றிலேயே முதல் முறை நதியில் நடைப்பெற உள்ளது. இந்த அணிவகுப்பு, தொடக்க போட்டி நடைப்பெறும் மைதானத்திற்கு வெளியே உள்ள சென் நதியில் நடத்தப்படும் என்று தெரிகிறது.

படகின் மூலமாக நடைப்பெறும் இந்த அணிவகுப்பில், ஒவ்வொரு நாட்டினை சேர்ந்தவர்களும் தனித்தனிக்குழுக்களாக பிரிக்கப்பட்டு படகுகளில் அமர்த்தப்பட்டு 6 கி.மீ நீளம் வரை அணிவகுத்து வருவர். ஆனால், இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும்,அணிவகுப்பினை மைதானத்திற்கு மாற்றுவதற்கான வாய்ப்பும் உள்ளது என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் டார்ச் :

மேத்யூ லெஹானியுர் என்ற வடிவமைப்பாளரால் வடிக்கப்பட்டு, பிரான்ஸில் உள்ள ஆர்செலர் மிட்டால் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

சுமார் 2000 டார்ச்சுகள் உருவாக்கப்பட்டு இந்த ஒலிம்பிக் தீபங்கள் சமத்துவம், நீதி, அமைதி ஆகியவற்றை நோக்கமாக கொண்டுதான் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேறென்ன ஸ்பெஷல்?

  • ஒரு நாளைக்கு 6 லட்சத்துக்கும் மேற்பட்ட உணவுகள் விநியோகம் செய்யப்படவுள்ளது.

  • ஒலிம்பிக் குறித்த செய்திகளை உலகெங்கிலும் கொண்டு செல்ல அங்கீகரிக்கப்பட்ட 20,000 செய்தியாளர்கள் பிரான்ஸ் வர இருக்கின்றனர்.

  • மொத்தமாக 3.5 லட்சம் மணி நேரம் ஒலிம்பிக் போட்டிகள் தொலைக்காட்சியில் நேரலை செய்யப்பட வுள்ளது.

  • 155 நாடுகளை சேர்ந்த 10,500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

  • பாரீஸ் உள்ள 35 இடங்களில் நடைப்பெறவுள்ள 32 விளையாட்டுகள், 329 பிரிவுகளில் நடைப்பெறவுள்ளது.

  • தற்போதைய நிலவரப்படி, ரூ.81,150 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பாதுகாப்பு, மற்றும் போக்குவரத்து செலவுகள் என ரூ.26,000 கோடி செலவு ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com