விளையாட்டு
5 மணி நேரம் கதகளி.. வரலாற்று சாதனை படைத்தார் ரஃபேல் நடால்!
5 மணி நேரம் கதகளி.. வரலாற்று சாதனை படைத்தார் ரஃபேல் நடால்!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவின் மெத்வதேவை வீழ்த்தி பட்டம் வென்றார் ஸ்பெயினின் ரஃபேல் நடால். இதன்மூலம் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளார் ரஃபேல் நடால்.

35 வயதான ரஃபேல் நடால், இன்று வென்ற கிராண்ட் ஸ்லாம் பட்டத்துடன் சேர்த்து இதுவரை கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் 21 பட்டங்கள் வென்று வரலாறு படைத்துள்ளார். முன்னதாக பிரெஞ்ச் ஓபனில் 13, அமெரிக்க ஓபனில் 4, ஆஸ்திரேலிய ஓபனில் 2, விம்பிள்டனில் 2 பட்டங்களை நடால் வென்றுள்ளார்
5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற போட்டியில் 2-6, 6-7, 6-4, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். முதல் 2 செட்களில் தோல்வியடைந்த ரஃபேல் நடால், அடுத்தடுத்த 3 செட்களை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.