வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்ஸில் நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் அபார சதமடித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் -நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடந்துவருகிறது. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி, 373 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்ஸில் 221 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி, 8 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் ராஸ் டெய்லர் அபார சதம் அடித்தார். கேப்டன் வில்லியம்சன் அரைசதம் அடித்தார்.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பிராத்வொயிட், பாவெல் களமிறங்கினர். இந்த இன்னிங்ஸிலும் ரன் கணக்கை தொடங்காமலேயே பாவெல் டக் அவுட் ஆனார். இன்னும் இரண்டு நாட்கள் மீதமிருக்கும் நிலையில் அந்த அணி, 2 விக்கெட்டுகளை இழந்து 30 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு இன்னும் 414 ரன்கள் தேவை.

