வெஸ்ட் இண்டீஸ்-நியூசி. டெஸ்ட்: மழையால் பாதிப்பு!

வெஸ்ட் இண்டீஸ்-நியூசி. டெஸ்ட்: மழையால் பாதிப்பு!
வெஸ்ட் இண்டீஸ்-நியூசி. டெஸ்ட்: மழையால் பாதிப்பு!

வெஸ்ட் இண்டீஸ் -நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பீல்டிங்கை தேர்ந்தெடுத்தது.
நியூசிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணி முதல் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது.

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. நியூசிலாந்தின் புளுன்டெல், கேப்ரியல் பந்துவீச்சில் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த சவுதி வேகமாக ஆடி 31 ரன்கள் சேர்த்து, ரோச் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து நியூசிலாந்து அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அந்த அணி, 373 ரன்கள் எடுத்திருந்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேப்ரியல் 4, ரோச் 3, கம்மின்ஸ் 2, ரீபர் ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர்.

அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பாவல் டக் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹெட்மையர் 28 ரன்களில் போல்ட் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். பிராத்வொயிட்டும் ஹோப்பும் ஆடிக்கொண்டிருந்தனர். மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தி வைக்கபட்டுள்ளது. 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com