இந்தியா Vs நியூசிலாந்து போட்டி இன்று தொடங்குமா? சவுத்தாம்டன் வானிலை எப்படி இருக்கிறது?

இந்தியா Vs நியூசிலாந்து போட்டி இன்று தொடங்குமா? சவுத்தாம்டன் வானிலை எப்படி இருக்கிறது?
இந்தியா Vs நியூசிலாந்து போட்டி இன்று தொடங்குமா? சவுத்தாம்டன் வானிலை எப்படி இருக்கிறது?

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மழையின் இடையூறு இல்லாமல் இன்றாவது தொடங்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுதாம்டனில் நடைபெறுகிறது. இதில் முதல் நாளில் விட்டுவிட்டு மழை பெய்த நிலையில் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். முதல் நாள் ஆட்டம் கை விடப்பட்டாலும் அதை ஈடுகட்டும் வகையில் ஆறாவது நாள் போட்டி நடைபெறும் என தொடக்கத்திலேயே அறிவிக்கப்பட்டிருந்தது.

எனவே ரிசர்வ் நாளான வரும் 23-ஆம் தேதி போட்டியின் இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி டிராவில் முடியும் பட்சத்தில் இரு அணிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை பகிர்ந்து கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கடந்த 5 ஆண்டுகளில் 32 டெஸ்ட் போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் 5 மட்டுமே டிராவில் முடிந்தது என்பதும் மற்ற போட்டிகளில் முடிவு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இன்று சதவுத்தாம்டன் நகரில் மழை குறுக்கீடு இருக்குமா இருக்காதா என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  சவுத்தாம்டனில் இன்று அவ்வளவாக மழை பெய்யாது என்றும் மழை பெய்வதற்கு 10 சதவித வாய்ப்பே இருப்பதாகவும் பிரிட்டன் வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆனால் ஞாயிறுக்கிழமையும், திங்கள்கிழமையும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com