WTC Final: இந்தியா Vs நியூசிலாந்து; சவுத்தாம்டனில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு?

WTC Final: இந்தியா Vs நியூசிலாந்து; சவுத்தாம்டனில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு?
WTC Final: இந்தியா Vs நியூசிலாந்து; சவுத்தாம்டனில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு?

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே சவுத்தாம்டன் நகரில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் 4-ஆம் நாளான இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் முதல் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் என்ற நிலையில் 3ஆம் நாள் ஆட்டத்தை இந்தியா நேற்று தொடர்ந்தது. போட்டி தொடங்கிய 3வது ஓவரிலேயே கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை இந்தியா இழந்தது. அவர் 44 ரன்கள் எடுத்திருந்தப்போது ஜேமிசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட துணை கேப்டன் ரஹேனா 49 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த வீரர்களில் அஸ்வின் மட்டும் 22 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 5 விக்கெட்களையும், போல்ட், வேக்னர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணியில் லாதம், கான்வே களமிறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் லாதம் 30 ரன்களை எடுத்திருந்தபோது அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அரைசதம் கடந்த கான்வே 54 ரன்கள் எடுத்தபோது விக்கெட்டை பறிகொடுத்தார்.

நியூசிலாந்து அணி 101 ரன்னிலும், கேப்டன் வில்லியம்சன் 12 ரன்களுடனும் ரோஸ் டெயிலர் ரன் கணக்கை தொடங்காமலும் களத்தில் இருந்தப்போது, போதிய வெளிச்சம் இன்மை காரணமாக முன்னதாகவே ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று 4 ஆம் நாள் ஆட்டம் நடைபெற இருக்கிறது. நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை விரைவாக அவுட்டாக்கினால் இந்தியா இந்தப் போட்டியில் வெற்றிப்பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகும்.

இன்றை வானிலை: சவுத்தாம்டனில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இன்றைய நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் போட்டியின்போது அவ்வப்போது மழை குறுக்கீடும் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சவுத்தாம்டன் நகரில் வானிலை மாறிக்கொண்டே இருக்கும் என்பதால் மழை இடையூறு இல்லாமல் போட்டி நடக்க 67 சதவிதம் வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com