\
இந்திய அணியை வீழ்த்திய பிறகு “ஜெய் ஸ்ரீராம்” என்று சொன்ன தெ.ஆப்ரிக்க வீரர் கேஷவ் மகராஜ்!

இந்திய அணியை வீழ்த்திய பிறகு “ஜெய் ஸ்ரீராம்” என்று சொன்ன தெ.ஆப்ரிக்க வீரர் கேஷவ் மகராஜ்!

இந்திய அணியை வீழ்த்திய பிறகு “ஜெய் ஸ்ரீராம்” என்று சொன்ன தெ.ஆப்ரிக்க வீரர் கேஷவ் மகராஜ்!
Published on

இந்திய அணியை 3 - 0 என்ற கணக்கில் வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றுள்ளது தென்னாப்பிரிக்க அணி. இந்த நிலையில் வெற்றிக்கு பிறகு அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளரும், இந்திய வம்சாவளியை சார்ந்தவருமான கேஷவ் மகராஜ், ‘ஜெய் ஸ்ரீராம்’ என தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

“என்னவொரு அற்புதமான வெற்றி இது. நீண்ட நெடிய பயணம் இது. இந்த வெற்றி அணிக்கு பெருமை சேர்த்துள்ளது. இது நம்மை ரீசார்ஜ் செய்து கொள்வதற்கான நேரம். அடுத்த சவாலுக்கு தயாராக வேண்டும். ஜெய் ஸ்ரீராம்” என இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் சொல்லியுள்ளார். அதோடு கோப்பையுடன் இருக்கும் அணியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 

கேஷவ் மகராஜின் மூதாதையர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என சொல்லப்பட்டுள்ளது. அங்குள்ள சுல்தான்பூர் அவர்களது பூர்வீகம் என தெரிகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com