இந்தியா - தென்னாப்ரிக்கா தொடர்: பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

இந்தியா - தென்னாப்ரிக்கா தொடர்: பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

இந்தியா - தென்னாப்ரிக்கா தொடர்: பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை
Published on
இந்தியா - தென்னாப்ரிக்கா இடையிலான கிரிக்கெட் தொடர்களை மைதானத்திற்கு சென்று காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என தென்னாப்ரிக்க கிரிக்கெட் வாரியமும், பி.சி.சி.ஐ.யும் கூட்டாக தெரிவித்துள்ளன.
தென்னாப்ரிக்காவில் கொரோனா நான்காவது அலை ஏற்பட்டுள்ளது. அதே சமயம் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் திட்டமிட்டபடி தொடரை நடத்தவும், வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பு நலன் கருதியும் மைதானத்தில் ரசிகர்களை அனுமதிக்க வேண்டாம் என்ற முடிவை இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்துள்ளன. இந்தியா தென்னாப்ரிக்க இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 26-ஆம் தேதி தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com