விளையாட்டு
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 -1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்க அணி வென்றுள்ளது. இந்த தொடரில் மேலும் ஒரு போட்டி நடக்க உள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதையடுத்து இந்திய அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்களில், 4 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்களை குவித்தது. பூனம் ராவத் 123 பந்துகளில் 104 ரன்கள் குவித்தார். தொடர்ந்து 267 ரன்களை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியின் டாப் 4 வீராங்கனைகள் அரைசதம் கடந்து அசத்தினர்.
அதன் பலனாக 48.4 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 269 ரன்களை குவித்தது தென்னாப்பிரிக்கா. இந்த வெற்றியின் மூலம் 3 - 1 என தொடரை அந்த அணி வென்றுள்ளது.