இந்திய பந்து வீச்சாளர்களின் வேகம்: டிவில்லியர்ஸ் ஆச்சரியம்!

இந்திய பந்து வீச்சாளர்களின் வேகம்: டிவில்லியர்ஸ் ஆச்சரியம்!

இந்திய பந்து வீச்சாளர்களின் வேகம்: டிவில்லியர்ஸ் ஆச்சரியம்!
Published on

இந்திய பந்துவீச்சாளர்கள், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களை ஆச்சரியப்பட வைத்தார்கள் என்று அந்த அணியின் வீரர் டிவில்லியர்ஸ் கூறினார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, ’செஞ்சுரியன் டெஸ்ட்டில் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. ஓர் அணியாக, இந்த வெற்றியை பெற்றோம். இந்த தொடரில் இந்திய அணி, சிறப்பாக விளையாடியது. இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் எங்களை ஆச்சரியப்பட வைத்தார்கள். நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக பந்துவீசினார்கள். முதல் இன்னிங்ஸில் விராத் கோலியின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. அவர் 150 ரன்கள் குவித்த பின் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தேன். 

2004-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானேன். முதலில் தொடக்க ஆட்டக்காரராக அறிமுகமாகி, பிறகு விக்கெட் கீப்பராக ஏழாம் நிலை வீரராக களமிறங்கினேன். பிறகு மீண்டும் தொடக்க வீரராக இறக்கப்பட்டேன். பல்வேறு வரிசைகளில் இறங்கி ஆடி, ஏற்ற, இறக்கங்களை கண்டுவிட்டேன். என் வாழ்க்கையில் இப்போதுதான் சிறந்த ஃபார்மில் இருப்பதாக நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட், ஒரு நாள் போட்டி, டி20 என ஒவ்வொரு விதமான போட்டியையும் ஒவ்வொரு விதமாக, நான் பிரித்துப் பார்ப்பதில்லை. ஒரே விதமாகவே பார்க்கிறேன். என் நோக்கம் வருகிற பந்தை கவனித்து அடிக்க வேண்டும் என்பதுதான். அதைதான் செய்கிறேன். என் மனநிலை அப்படித்தான் இருக்கிறது. இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட் சவாலானதுதான்’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com