\
ஸ்மித் இடத்தில் கிளாசன்...!

ஸ்மித் இடத்தில் கிளாசன்...!

ஸ்மித் இடத்தில் கிளாசன்...!
Published on

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இருவரும் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒரு ஆண்டு விளையாட தடை விதிக்கபட்டுள்ளது.

உலக கிரிக்கெட் அரங்கில் புயலை கிளப்பியிருந்த இந்த விவகாரத்தையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் ஓராண்டுக்கு ஐ.பி.எல், உட்பட எந்த போட்டிகளிலும் பங்கேற்க தடை விதித்துள்ளது. அதேபோல் கேப்டன் பொறுப்பு வகிக்கவும் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கபட்டு இருந்தது. இது பற்றி கருத்து தெரிவித்த ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா “ அஸி.கிரிக்கெட் வாரியத்தால் தடை செய்யபட்டுள்ள ஸ்மித், வார்னர் இருவரும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க முடியது. அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் விளையடுவார்கள்’ என தெரிவித்து இருந்தார். இதனால் ஸ்மித், வார்னர் விளையாட இருந்த  ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் அவர்கள் விளையாட இருந்த இடத்திற்கு மாற்று வீரர்களை தேடி வந்தது. இந்த நிலையில் தான் இந்தியா உடன் நடந்த தொடரில் அதிரடியில் கலக்கிய தென் ஆப்ரிக்கா விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கிளாசன், ஸ்மித்க்கு பதிலாக ராஜஸ்தான் அணிக்கு சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் வார்னர் விளையாட இருந்த இடத்தில் இலங்கையை சேர்ந்த  விக்கெட்கீப்பர் குசல் பெரேரா விளையாடுவார் எனவும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி சூசகமாக தெரிவித்துள்ளது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com