சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஸ்டெயின் ஓய்வு

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஸ்டெயின் ஓய்வு
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஸ்டெயின் ஓய்வு

தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார். 

தென் ஆப்பிரிக்கா அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். இவர் கடந்த 2004ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். இதுவரை தென் ஆப்பிரிக்காவிற்கு 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள இவர் 439 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் டேல் ஸ்டெயின் முதலிடத்தில் உள்ளார். சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இவர் 8-ஆவது இடத்தில் உள்ளார். 

இந்நிலையில் டேல் ஸ்டெயின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து தனது ஓய்வை இன்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர்,“இன்று எனக்கு மிகவும் பிடித்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவிக்கிறேன். டெஸ்ட் போட்டிகள் தான் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்த போட்டிகள். ஏனென்றால் இந்தப் போட்டிகள் உங்களை மனதளவு, உடலளவு மற்றும் உணர்வளவில் சோதனை செய்கின்றன. இனிமேல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட முடியாதது மிகவும் கடினமான ஒன்றுதான். நான் இனி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிக கவனம் செலுத்த போகிறேன். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரிய தலைவர் தபாங்,“டேல் ஸ்டெயின் மிகவும் சிறப்பான பந்துவீச்சாளர். அவர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் மைக்கேல் வாகனை அவுட் ஆக்கியது முதல் தற்போது வரை சிறப்பாகவே பந்துவீசி வந்தார். இவர் தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சில் முக்கியமான ஒரு நபராக இருந்தார். இவர் இனி வரும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முன்னோடியாக திகழ்வார்”எனக் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com