\
ஒரு ரன்னில் இரட்டை சதத்தை தவறவிட்ட வீரர்

ஒரு ரன்னில் இரட்டை சதத்தை தவறவிட்ட வீரர்

ஒரு ரன்னில் இரட்டை சதத்தை தவறவிட்ட வீரர்
Published on: 

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் எல்கார், ஒரு ரன்னில் இரட்டை சதத்தை தவறவிட்டார்.

தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, தென்னாப்பிரிக்காவில் உள்ள சென்வெஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்பிற்கு 496 ரன்கள் குவித்து‌ டிக்ளேர் செய்தது. இதில் 388 பந்துகளில் 199 ரன்கள் எடுத்த எல்கார் ஒரு ரன் வித்தியாசத்தில் இரட்டை சதத்தை தவறவிட்டார். 2ஆம் நாள் முடிவில் பங்களாதேஷ் அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்தது.