48 வருட ஏக்கத்திற்கு முடிவு கட்டிய தென் ஆப்பிரிக்கா

48 வருட ஏக்கத்திற்கு முடிவு கட்டிய தென் ஆப்பிரிக்கா

48 வருட ஏக்கத்திற்கு முடிவு கட்டிய தென் ஆப்பிரிக்கா
Published on

ஜோகன்னஸ்பர்க் டெஸ்டின்  ஆஸ்திரேலியாவை 119 ரன்னில் சுருட்டியதன் மூலம் 48 வருடம் கழித்து சொந்த மண்ணில் தொடரை கைப்பற்றியுள்ளது தென்ஆப்பிரிக்கா. 

தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வந்தது. பந்தை சேதபடுத்திய விவகாரத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியா அணியில் பல்வேறு மற்றம் செய்யபட்டு களம் இறங்கியது. 
இதில் டாஸ் வென்று தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா மார்கிராமின் (152)  டிவிலியர்ஸ் 69 ரன்கள் உதவியுடன் தென் ஆப்பிரிக்கா அணி 488 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி சார்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

பின்னர் விளையாடிய  ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. கவாஜா (53), டிம் பெய்ன் (62), பேட் கம்மின்ஸ் (50) ஆகியோரின் அரைசதங்களால் 221 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. இதனால் 267 ரன்கள் முன்னிலைப் பெற்ற தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. டு பிளிசிஸ் 120 ரன்கள் எடுக்க  தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா  611 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

இமாலய இலக்குடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸ்சிலும் ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. பெரும்பாலான வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற ஆஸ்திரேலியா 119 ரன்னில் சுருண்டது. பிலாண்டர் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இதனால் தென்ஆப்பிரிக்கா 492 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகளை கொண்ட தொடரை தென்ஆப்பிரிக்கா 3-1 என கைப்பற்றியது. 1970-க்குப் பிற தென்ஆப்பிரிக்கா சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டெஸ்ட் தொடரை கைப்பற்றியது கிடையாது. இந்தத் தொடரை வென்று 48 வருட ஏக்கத்திற்கு முடிவு கட்டியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com