விளையாட்டு
தென் ஆப்ரிக்க அணி முதலிடத்தை எட்டும்: பயிற்சியாளர் கிப்சன்
தென் ஆப்ரிக்க அணி முதலிடத்தை எட்டும்: பயிற்சியாளர் கிப்சன்
தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியை புதிய உயரத்தை எட்டச் செய்ய தம்மால் முடியும் என்று தலைமை பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சன் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்க தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தர நிலையில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் அளவுக்கு திறமையான வீரர்கள் தென் ஆப்ரிக்க அணியில் நிரம்பியுள்ளதாக குறிப்பிட்டார். வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த முன்னாள் வீரரான ஒட்டிஸ் கிப்சன் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்து வந்தார். தென் ஆப்ரிக்க அணியின் தலைமை பயிற்சியாளராக கிப்சன் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.