\
டி20 உலகக்கோப்பைக்கு முன் டிவில்லியர்ஸ் அணிக்கு திரும்புவார் - டூ பிளசிஸ்

டி20 உலகக்கோப்பைக்கு முன் டிவில்லியர்ஸ் அணிக்கு திரும்புவார் - டூ பிளசிஸ்

டி20 உலகக்கோப்பைக்கு முன் டிவில்லியர்ஸ் அணிக்கு திரும்புவார் - டூ பிளசிஸ்
Published on: 

இருபது ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு முன்னரே ஏ பி டிவில்லியர்ஸ் அணிக்கு திரும்பவிருப்பதாக தென்னாப்ரிக்க அணி கேப்டன் டூ-பிளசிஸ் கூறியுள்ளார்.

இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியின் ஜாம்பவான் வீரர்களில் ஒருவரான டிவில்லியர்ஸ் 2018 ஆம் ஆண்டு அனைத்து வித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். இந்நிலையில் கடந்தாண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கு தென்னாப்ரிக்க அணியை பலப்படுத்த அவர் அணிக்கு திரும்புகிறார் என்ற செய்திகள் உலா வந்தன.

அவரை மீண்டும் அழைப்பது குறித்து அணியின் துணை பயிற்சியாளர்கள் மற்றுன் முன்னாள் கேப்டன் ஸ்மித் உள்ளிட்டோரிடம் ஆலோசித்து விட்டதாகவும் தென்னாப்ரிக்க கேப்டன் டூ பிளசிஸ் தெரிவித்துள்ளார். உலகக்கோப்பைக்கு முன்னரே ஏ பி டிவில்லியர்ஸ் அணிக்கு திரும்பவிருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com