\
டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
Published on

ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியில் இடம்பெறும் 15 வீரர்களின் பெயர்பட்டியலை வெளியிட்டிருக்கிறது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி.

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17 துவங்கி நவம்பர் 14 வரை நடை பெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்குபெறும் தென் ஆப்பிரிக்க வீரர்களின் பெயர்பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. தென் ஆப்பிரிக்க அணிக்கு டெம்பா பவுமா கேப்டனா நியமிக்கப்பட்டுள்ளார். கேஷவ் மகாராஜ், குயிண்டன் டி காக் இருவரும் விக்கெட் கீப்பர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அணியில் ஜோர்ன் ஃபார்டியுன்,  ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் க்ளாசன், மார்க்ராம், டேவிட் மில்லர்,  முல்டர், லுங்கி என்கிடி, ஆன்ரிச் நார்ட்ஜே, ட்வைன் ப்ரிடோரியஸ்,  ரபாடா, ராப்ரைஸ் ஷாம்சி,  வான் டேர் டுசைன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அணியில் மாற்றுவீரர்களாக ஆண்டிலே பெக்லுக்வாயோ மற்றும் லிசாட் வில்லியம்ஸ் ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com