12 பேருக்கு கொரோனா ? : சென்னை அணிக்கு நீட்டிக்கப்படும் குவாரன்டைன்
சென்னை அணியை சேர்ந்த 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தனிமைப்படுத்தல் மேலும் தொடரவுள்ளது.
நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் யுஏஇ சென்றுள்ளன. அவர்களுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த ஒரு பவுலர் மற்றும் உதவியாளர்கள் உட்பட மொத்தம் 12 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் யார் யார் ? கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.
இருப்பினும் ஐபிஎல் தொடர் நெருங்கும் நிலையில் இந்த கொரோனா பாதிப்பு சென்னை அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி சக வீரர்களுக்கும் மேலும் ஒருவாரம் தனிமைப்படுத்தல் தொடரும் எனப்படுகிறது. இதனால் பயிற்சியில் பின்னடைவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.