’இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவாங்க?’ ஐசிசி தலையிட கங்குலி கோரிக்கை!

’இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவாங்க?’ ஐசிசி தலையிட கங்குலி கோரிக்கை!

’இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவாங்க?’ ஐசிசி தலையிட கங்குலி கோரிக்கை!
Published on

ஜோகன்னஸ்பர்க் ஆடுகளத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். 

தென்னாப்பிரிக்க அணியுடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 187 ரன்களுக்கு சுருண்டது. 
ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், தொடக்க வீரர்களான ராகுல் ரன் எதுவும் எடுக்காமலும், முரளி விஜய் 8 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். நிதனமாக விளையாடி அரைசதம் அடித்த புஜாரா 50 ரன்களிலும், கேப்டன் கோலி 54 ரன்களிலும் வெளியேறினார். ர‌ஹானே 9 ரன்களிலும், பார்த்திவ் படேல் 2 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஹர்திக் பாண்ட்யா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். புவனேஷ்வர் குமார் 30 ரன்கள் எடுத்தார்.

ரபடா 3 விக்கெட்டுகளையும், பெலுக்வாயோ, பிலாண்டர், மோர்கல் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்க அணி முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 6 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில் பிட்ச் பற்றி கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, ’டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ஆடுகளத்தை இப்படி தயார் செய்திருப்பது ஏற்புடையதல்ல. பேஸ்ட்மேன்கள் விளையாடுவதற்கு குறைந்தபட்ச வாய்ப்பாவது கொடுக்க வேண்டும். இந்தப் பிரச்னையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலையிட வேண்டும்’ என்று கூறியுள்ளார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com