உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: நேரில் பார்க்க செல்லாத சவுரவ் கங்குலி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: நேரில் பார்க்க செல்லாத சவுரவ் கங்குலி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: நேரில் பார்க்க செல்லாத சவுரவ் கங்குலி
Published on

இந்தியா - நியூசிலாந்து இடையே நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நேரில் காண பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும், செயலாளர் ஜெய் ஷாவும் செல்லவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா- நியூசிலாந்துடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை சுவுத்தாம்ப்டன் நகரில் நடைபெறுகிறது. இதன் பின்பு இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. இந்த சுற்றுப் பயணத்துக்காக இந்திய வீரர்கள் மும்பையில் இருக்கும் ஹோட்டலில் 14 நாள்கள் தங்களை தனிமைப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர் "இங்கிலாந்துக்கு குடும்பத்தினருடன் வருவதற்கு அனுமதியளித்த பிரிட்டன் அரசாங்கத்துக்கு நன்றி. குடும்பத்துடன் இருப்பது வீரர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும், வீரர்களின் நல்ல மன நிலைக்கு அது உதவும். அதேபோல இந்தப் போட்டியை நேரில் காண கங்குலியும், ஜெய் ஷாவும் செல்லவில்லை" என்றார்.

மேலும் பேசிய அவர் " எனக்கு தெரிந்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் அவர்கள் வருவதற்கு அனுமதி கொடுக்கவில்லை. ஏனென்றால் நேரில் செல்வதற்கு முன்பு பயோ பபுள் முறையை கடைப்பிடிக்க வேண்டும். அம்முறையால் நிறைய நாள்கள் வீணாகும் என்பதால் இருவரும் போட்டியை காண நேரில் செல்லவில்லை. இந்திய வீரர்களின் 14 நாள்கள் தனிமைப்படுத்தலில் அவர்களுக்கு 6 முறை ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது" என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com