வீட்டுக் காவலில் இருந்து விடுதலையாகிறார் கால்பந்தாட்ட வீரர் ரொனால்டினோ!!

வீட்டுக் காவலில் இருந்து விடுதலையாகிறார் கால்பந்தாட்ட வீரர் ரொனால்டினோ!!

வீட்டுக் காவலில் இருந்து விடுதலையாகிறார் கால்பந்தாட்ட வீரர் ரொனால்டினோ!!
Published on

பிரேசில் கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஒருவரான ரொனால்டினோ விரைவில் வீட்டுக்காவில் இருந்து வெளியாக உள்ளார். 

போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் கைதாகி பராகுவேவின் தலைநகரான அசுன்சியனில் வீட்டுக் காவலில் உள்ள அவர் அதிலிருந்து விடுதலையாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளன. 

போலி ஆவணங்களை கொடுத்து பராகுவே நாட்டிற்குள் நுழைந்ததற்காக கடந்த ஏப்ரல் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். சுமார் 32 நாட்கள் பராகுவே சிறையில் இருந்த அவர் ஜாமீனுக்கான அபராத தொகையை கட்டிய பிறகு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

அவர் மீது தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிக்க சரியான ஆதாரங்கள் இல்லாத நிலையில் ரொனால்டினோவும் அவரது சகோதரரும் இந்த வழக்கிலிருந்து விடுதலையாவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றினால் உலகம் முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை தனது வீட்டுக் காவல் அனுபவத்தோடு ரொனால்டினோ ஒப்பிட்டுப் பார்த்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

"விரைவில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பும் என நான் நம்புகிறேன். எங்கள்  வீட்டுக்கு திரும்ப உள்ளோம். அனைத்தும் முன்பு போலவே இருக்கும்" என்கிறார் ரொனால்டினோ.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com