‘நானும், தவானும் டீமை விட்டு வெளியே போகணும்; அப்படி தானே?’ - நிருபரை கலாய்த்த ரோகித் சர்மா

‘நானும், தவானும் டீமை விட்டு வெளியே போகணும்; அப்படி தானே?’ - நிருபரை கலாய்த்த ரோகித் சர்மா
‘நானும், தவானும் டீமை விட்டு வெளியே போகணும்; அப்படி தானே?’ - நிருபரை கலாய்த்த ரோகித் சர்மா

நிருபரின் கேள்விக்கு பதிலளித்த ரோகித் சர்மா, ‘உங்களுக்கு நானும், ஷிகர் தவானும் அணியைவிட்டு வெளியில் இருக்க வேண்டும். இஷான் கிஷனும், ருதுராஜ் கெய்க்வாட்டும் தொடக்க வரிசையில் விளையாட வேண்டும் அப்படி தானே?’ என்று சொல்லி சிரித்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 அன்றும் டி20 தொடர் பிப்ரவரி 16 அன்றும் தொடங்குகின்றன. இந்நிலையில் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார் கேப்டன் ரோஹித் சர்மா. அப்போது அவர் கூறுகையில், ''அணியின் கட்டமைப்பில் பெரிய அளவில் மாற்றம் செய்ய வேண்டியதில்லை. நாங்கள் சிறந்த அணி. சிறந்த வீரர்கள். அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்று கேட்கிறீர்கள். அது குறித்து முடிவு செய்ய நேரம் இருக்கிறது. இப்போதைக்கு எனது கவனம் வெஸ்ட் இண்டீஸ் தொடரின் மீதே உள்ளது'' என்றார்

டாப் வரிசையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்று நிருபர் ஒருவரின் கேள்விக்கு கிண்டலாக பதில் அளித்த ரோகித் சர்மா, ‘உங்களுக்கு நானும், ஷிகர் தவானும் வெளியில் இருக்க வேண்டும். இஷான் கிஷனும், ருதுராஜ் கெய்க்வாட்டும் தொடக்க வரிசையில் விளையாட வேண்டும் அப்படி தானே?’ என்று சொல்லி சிரித்தார்.

இதையும் படிக்க: அன்று தோனி.. இன்று தினேஷ் பானா.. உலகக்கோப்பையில் சிக்ஸர் விளாசி வெற்றி - வைரலாகும் போட்டோ

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com