சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!

சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!

சர்வதேச கிரிக்கெட்டில் இலக்கை துரத்தும்போது தொடர்ச்சியாக 10 அரை சதங்கள் விளாசியவர் என்ற புதிய சாதனையை இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.

தென்ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி லக்னோவில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் மிதாலிராஜ் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் ‘பேட்’ செய்த தென்ஆப்பிரிக்க அணி, இந்திய வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 41 ஓவர்களில் 157 ரன்னில் சுருண்டது. தொடர்ந்து ஆடிய இந்தியா 28.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், முந்தைய தோல்விக்கும் தக்க பதிலடி கொடுத்தது.

இதில் அதிரடியாக தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 64 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 80 ரன்கள் அடித்தார். இதனால் சர்வதேச கிரிக்கெட்டில் இலக்கை துரத்தும்போது தொடர்ச்சியாக 10 அரை சதங்கள் விளாசியவர் என்ற புதிய சாதனையை இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தானா படைத்தார். ஆடவர், மகளிர் என இரு பிரிவு கிரிக்கெட்டிலும் இலக்கை துரத்தும்போது தொடர்ச்சியாக 10 அரை சதங்களை விளாசியவர் என்ற பெருமையையும் மந்தனா தற்போது பெற்றுள்ளார். நியூசிலாந்தின் சுசி பேட்ஸ் 9 அரை சதங்களை விளாசியதே முந்தைய சாதனையாக இருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com