”ஒரே பந்தில் 16 ரன்கள்!” - அடுத்தடுத்து இரண்டு டி20 சதங்களை விளாசிய ஸ்டீவ் ஸ்மித்!

”ஒரே பந்தில் 16 ரன்கள்!” - அடுத்தடுத்து இரண்டு டி20 சதங்களை விளாசிய ஸ்டீவ் ஸ்மித்!
”ஒரே பந்தில் 16 ரன்கள்!” - அடுத்தடுத்து இரண்டு டி20 சதங்களை விளாசிய ஸ்டீவ் ஸ்மித்!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக்பேஷ் டி20 லீக் தொடரில், ஒரே பந்தில் 16 ரன்களை அடித்து அசத்தியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்.

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற டி20 லீக்கான பிக்பேஷ் தொடரில், சிட்னி சிக்சர் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித், அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டு டி20 சதங்களை அடித்து அசத்தியுள்ள நிலையில், இன்றைய லீக் போட்டியில் ஒரே பந்தில் 16 ரன்களை விளாசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ஸ்மித்தின் இந்த அடுத்தடுத்த அதிரடியான ஆட்டத்திற்கு பிறகு, இந்தியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் தன்னுடைய பழைய ஃபார்மை ஸ்டீவ் ஸ்மித் எடுத்துவருவார் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

எதுக்கு டி20 அணியில் ஸ்டீவ் ஸ்மித் முதல் - ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர் தேவை என்பது வரை!

பொதுவாக டெஸ்ட் போட்டிகளுக்கான தற்போதைய ஜாம்பவான் வீரர் என்ற பெயர்போன ஸ்டீவ் ஸ்மித், டெஸ்ட் போட்டிகளில் 162 இன்னிங்ஸ்களில் விளையாடி 8647 ரன்களை குவித்துள்ளார். மாடர்ன் டே கிரிக்கெட்டில் 60 டெஸ்ட் சராசரியுடன் இருக்கும் ஒரே வீரர் ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே. ஒருநாள் போட்டிகளில் 45 சராசரியுடன் 4917 ரன்களை குவித்துள்ளார்.

ஆனால் டி20 போட்டிகளில் அவருடைய சராசரியானது 30க்கும் கீழாக உள்ளது. 51 இன்னிங்ஸ்களில் விளையாடி இருக்கும் அவருடைய சராசரி 25ஆகவே உள்ளது. இதனால் 2021, 2022 டி20 உலகக்கோப்பையின் போது எதற்காக ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால் டி20 உலககோப்பை போட்டிகளில் விக்கெட்டுகள் விரைவாகவே விழுந்த போட்டிகளில் நிலைத்து நின்று விளையாடி ரன்களை சேர்த்திருந்தார் ஸ்மித். அதற்கு பின்னர், இதற்கு தான் ஸ்மித் போன்ற வீரர்கள் அணிக்குள் தேவை என்று சொல்லப்பட்டது.

அதாவது ஹேங்கிங் ரொல் ஆடுவதற்காக மட்டுமே ஸ்மித் போன்ற வீரர்கள் வேண்டுமென்று சொல்லப்பட்டது. இந்நிலையில் அதை மாற்றும்விதமாக தற்போது பிபிஎல் தொடரில் அடுத்தடுத்து அபாரமான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறார் ஸ்டீவ் ஸ்மித்.

66 பந்துகளில் 125 ரன்கள் - 56 பந்துகளில் 101 ரன்கள்!

பிபிஎல் தொடரில் சிட்னி சிக்சர் அணிக்காக ஓபனிங் வீரராக களமிறங்கி ஆடிவரும் ஸ்டீவ் ஸ்மித், அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் சதத்தை பதிவுசெய்து அசத்தியுள்ளார்.

கடந்த 21ஆம் தேதி சிட்னி தண்டர் அணிக்கு எதிரான போட்டியில் 66 பந்துகளில் 9 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் விளாசிய ஸ்மித், சிறப்பான ஸ்டிரைக்ரேட்டில் 125 ரன்களை குவித்தார். அதற்கு முந்தைய போட்டியில் தான் அடிலய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிராக அவர், 56 பந்துகளில் 101 ரன்களை குவித்திருந்தார். இரண்டு போட்டிகளையும் சேர்த்து மொத்தமாக 16 சிக்சர்களை விளாசி அசத்தியுள்ளார். பிபிஎல் தொடரில் அடுத்தடுத்து இரண்டு சதங்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஸ்மித்.

1 பந்தில் 16 ரன்கள்!

சிட்னி சிக்சர் மற்றும் ஹொபர்ட் ஹரிகேன்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்ற இந்த போட்டியில் முதல் பேட்டிங் செய்தது சிட்னி சிக்சர் அணி. ஓபனிங் வீரராக ஸ்டிரைக் செய்த ஸ்மித்திற்கு எதிராக, இரண்டாவது ஓவரில் 3ஆவது பந்தை வீசினார் ஹரிகேன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பாரிஸ். பாரிஸ் வீசிய 3ஆவது நோ பாலாக மாற, அதை சிக்சருக்கு பறக்கவிட்டார் ஸ்மித். பின்னர் ஃப்ரீ ஹிட் பந்தை வீசிய பாரிஸ் ஒயிட் பாலாக வீச, அது பவுண்டரிக்கு சென்றது. தொடர்ந்து ஃப்ரீ ஹிட் தொடர் அவர் வீசிய 3ஆவது பந்தை பவுண்டரிக்கு விளாசினார், ஸ்டீவ் ஸ்மித்.

இந்நிலையில் பாரிஸ் வீசிய அந்த ஒரே பந்துவீச்சில் 7, 5, 4 என 16 ரன்களை சேர்த்தது சிட்சி சிக்சர் அணி. தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மித் 6 சிக்சர்களை பறக்கவிட்டு 33 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்து தன்னுடைய அரைசதத்தை பதிவுசெய்தார். சுழற்பந்துவீச்சாளர் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஸ்மித், அதை பவுண்டரி லைன் தாண்டி மேற்கூரைக்கு மேல் பறக்கவிட்டார். 22 பந்துகளில் அரசைதம் கடந்த ஸ்மித், தன்னுடைய விரைவான டி20 அரைசதத்தை பதிவுசெய்துள்ளார். 180 ரன்களை குவித்த சிட்னி சிக்சர் அணி 24 ரன்களில் வெற்றிபெற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com