\
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட்: தினேஷ் சண்டிமால் சதம்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட்: தினேஷ் சண்டிமால் சதம்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட்: தினேஷ் சண்டிமால் சதம்
Published on

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால் அபார சதமடித்தார்.

இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிராஸ் ஐலெட்டில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. கேப்டன் தினேஷ் சண்டிமால் 119 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். இது அவருக்கு 11 வது சதம். குசால் மெண்டிஸ் 45 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேப்ரியல் 5 விக்கெட்டும் ரோச் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் போட்டி தொடங்கியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி, 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 53 ரன்களுடனும் ஹோப் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com