ச்சே...நல்ல மனுஷன்! ஸ்மித்துக்கு தென்னாப்பிரிக்க கேப்டன் ஆறுதல் மெசேஜ்!

ச்சே...நல்ல மனுஷன்! ஸ்மித்துக்கு தென்னாப்பிரிக்க கேப்டன் ஆறுதல் மெசேஜ்!

ச்சே...நல்ல மனுஷன்! ஸ்மித்துக்கு தென்னாப்பிரிக்க கேப்டன் ஆறுதல் மெசேஜ்!
Published on

தடை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு அளிக்கப்பட்ட தண்டனை கடுமையானது தான் என்று தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளிசிஸ் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட், தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் பந்தை திட்டமிட்டு சேதப் படுத்திய சம்பவம் கிரிக்கெட் உலகை அதிரச் செய்தது. மூத்த வீரர்களின் ஆலோசனைப்படிதான் பந்தின் தன்மையை மாற்ற பேன்கிராஃப்ட் முயன்றதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கேப்டன் பதவியில் இருந்து ஸ்மித்தையும், துணை கேப்டன் பதவியில் இருந்து வார்னரையும் நீக்கி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக் கை மேற்கொண்டது. பின்னர் அவர்களுக்கு ஓராண்டு தடை விதித்துள்ளது. பேன்கிராஃப்ட்டுக்கு ஒன்பது மாதம் தடை விதிக் கப் பட்டுள்ளது. இதையடுத்து மூவரும் கண்ணீர் பேட்டி அளித்து, மன்னிப்பு கேட்டுள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தென்னாப்பிரிக்க கிரிக்கெட் கேப்டன், டுபிளிசிஸ் கூறும்போது, ’நான் ஸ்மித்துக்கு மெசேஜ் அனுப்பினேன். அவருக்காக வருந்துகிறேன். யாருக்கும் இப்படி நடந்து விடக்கூடாது என்பதே என் கவலை. எனக்கு அவர் மீது இரக்கம் ஏற்பட்டது. இனி வரும் நாட்கள் அவருக்கு விவரிக்க முடியாத அளவுக்கு கடினமாக அமையும். அதனால் தான் அவருக்காக மெசேஜ் அனுப்பி ஆறுதல் தெரிவித்தேன். அதில், இந்தக் காலக்கட்டத்தை கடந்து மீண்டும் வலுவாக வரு வார் என்று கூறியிருந்தேன். அதை அவர் வரவேற்றிருந்தார். ஸ்மித் நல்லவர். எங்கள் இருவருக்குள்ளும் நல்ல மரியாதை இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியின் சிறந்த கேப்டன் அவர். மோசமான இடத்தில் அவர் மாட்டிக்கொண்டார். அதற்கான பொறுப்பையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். ஆஸ்திரேலிய நாட்டினர் தங்கள் அணியிடமிருந்து உயர்ந்த மதிப்புகளை எதிர் பார்க்கிறார்கள் என்பதன் விளைவுதான் இவ்வளவு கடுமையான தண்டனை என நினைக்கிறேன்’ என்று தெரிவித்துள் ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com