"நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு மோசமான ஆட்டம்" வருத்தத்துடன் ரோகித் சர்மா

"நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு மோசமான ஆட்டம்" வருத்தத்துடன் ரோகித் சர்மா

"நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு மோசமான ஆட்டம்" வருத்தத்துடன் ரோகித் சர்மா
Published on

நீண்ட காலத்திற்கு பிறகு இது ஒரு மோசமான ஆட்டம் எனவும் ஆனால் செய்த தவறுகளை வீரர்கள் திருத்திக்கொள்வார்கள் எனவும் இந்திய அணியின் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. நேப்பியரில் நடந்த முதலாவது போட்டியில் வெற்றப் பெற்ற இந்திய அணி, மவுன்ட் மாங்கனுயி-ல் நடந்த இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில் நான்காவது ஒருநாள் போட்டி, ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. 

கேப்டன் விராத் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், இன்றைய போட்டியில் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றார். இது அவருக்கு 200 வது ஒரு நாள் போட்டி. 

நான்காவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக் காரர்கள் ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா 7 ரன்களிலும், ஷிகர் தவான் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

இதற்கடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து குறைந்த ரன்னில் ஆட்டமிழக்க 92 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இந்தியா சுருண்டது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 14.5 ஓவரில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக பவுல்ட் 21 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார். 

இந்நிலையில், ஆட்டத்தின் இறுதியில் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா “நீண்ட காலத்திற்கு பிறகு இது ஒரு மோசமான ஆட்டம். யாரும் இதை எதிர்ப்பார்க்கவில்லை. நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களை பாராட்டியே ஆக வேண்டும். இது அவர்களுக்கு ஒரு நல்ல முயற்சி. இது எங்களுக்கு ஒரு படிப்பினை. இதுபோன்ற அழுத்தங்களை நாம் உள்வாங்கித்தான் ஆக வேண்டும். இதற்காக யாரையும் குறை சொல்ல முடியாது. அவங்கவங்களேதான் இதற்கு பொறுப்பு. ஆனால் செய்த தவறுகளை வீரர்கள் திருத்திக்கொள்வார்கள்” எனத் தெரிவித்தார். 

இதைத்தொடர்ந்து இந்தியா நியுசிலாந்து இடையேயான 5 வது ஒருநாள் போட்டி வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெள்ளிங்டன்னில் தொடங்குகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com