\
மைதானத்திற்கு வெளியே சென்ற காரை பதம் பார்த்த ஏபிடி விளாசிய பந்து - வீடியோ

மைதானத்திற்கு வெளியே சென்ற காரை பதம் பார்த்த ஏபிடி விளாசிய பந்து - வீடியோ

மைதானத்திற்கு வெளியே சென்ற காரை பதம் பார்த்த ஏபிடி விளாசிய பந்து - வீடியோ
Published on

பேட்ஸ்மேன்களின் சொர்கபுரியான ஷார்ஜா மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த பெங்களூரு இருபது ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்களை குவித்துள்ளது. 

360 டிகிரி பேட்ஸ்மேனான ஏபி டிவில்லியர்ஸ் 33 பந்துகளில் 73 ரன்களை குவித்தார். அதில் 5 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடங்கும். 

கமலேஷ் நாகர்கோட்டி வீசிய 16வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை அடுத்தடுத்து அடித்து தெறிக்கவிட்டிருப்பார் ஏபிடி.

இரண்டு சிக்ஸர்களும் மைதானத்துக்கு வெளியே பறந்து சென்றன.  

அதில் ஒரு சிக்ஸர் மைதானத்தை ஒட்டி அமைந்திருந்த சாலையில் சென்று கொண்டிருந்த காரை பதம் பார்த்தது.    

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com